கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள வசீப்ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் – செட்டிப்பாளையம் சாலை, அரசு பணியாளர் குடியிருப்பு அருகே வசீப்ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீவிபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரும்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.